விண்டோஸ் 10 இயங்குதளம் இம்மாதம் 29 ஆம் திகதி அறிமுகம்

விண்டோஸ் 10 இயங்குதளத்தினை இம்மாதம் 29 ஆம் திகதி அறிமுகம் செய்யவுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இவ் இயங்குதளமான கணனிகள், மொபைல்கள் என ஒரு பில்லியன் வரையான சாதனங்களில் பயன்படுத்தப்படவுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் கணக்கிட்டுள்ளது.

 

இவற்றில் விண்டோஸ் 8.1 இயங்குதளத்தினை தற்போது பயன்படுத்துபவர்கள் இலவசமாக விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கு மேம்படுத்திக் கொள்ள (Upgrade) முடியும் எனவும், புதிதாக கொள்வனவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் விண்டோஸ் 10 இயங்குதளத்தின் Technical Preview பதிப்பு ஏற்கணவே வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.