கல்முனையில் இந்திய வைத்திய நிபுணர்களால் இலவச வைத்திய முகாம்

இந்தியாவை சேர்ந்த வைத்திய நிபுணர்களால் இலவச வைத்திய முகாம் ஒன்று இந்த மாதம் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை கல்முனை ஆதார வைத்தியசாலையில் நடத்தப்படவுள்ளது.

கொழும்பு மேற்கு ரொட்டரி கிளையின் (ROTARY CLUB) அனுசரணையுடனும் கல்முனை ரொட்டரி கிளையின் (ROTARY CLUB) வழிநடத்தலுடனும் நடைபெறவிருக்கும் இந்த முகாமில் காது, மூக்கு, தொண்டை (ENT) தொடர்பாக சிகிச்சை பெற விரும்புபவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்முனை ஆதார வைத்தியசாலை வரவேற்பு கரும பீடத்தில் தங்களது பெயர், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் என்பவற்றை எதிர்வரும் 26ஆம் திகதிக்கு முன்னதாக பதிவு செய்து கொள்ளுமாறு கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.