வீரமுனையைச் சேர்ந்த திரு. சு.சுதேந்திரன் அவர்கள் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

கிழக்கிலங்கை அம்பாரை மாவட்டம் வீரமுனையைச் சேர்ந்த திரு. சுப்பிரமணியம் சுதேந்திரன் அவர்கள் 2017.03.16ஆம் திகதியன்று கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஏ.ராமக்கமலன் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இவர் பொன்னுச்சாமி சுப்பிரமணியம்இ கந்தையா மாணிக்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனாவர். சது/ வீரமுனை இராமக்கிருஷ்ண மகாவித்தியாலயம், சம்மாந்துறை மத்திய கல்லூரி, கல்முனை உவெஸ்லி உயர் பாடசாலை, மட்டக்களப்பு மத்திய கல்லூரி என்பவற்றின் பழைய மாணவரும், வீரமுனை சீர்பாததேவி சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும், முன்னால் தலைவரும், குருசுவாமி அறநெறிப் பாடசாலையின் முன்னால் அதிபருமாவார்.  மேலும் திருஞான சம்பந்தர் அறநெறிப்பாடசாலையின் ஆசிரியர், வீரமுனை சமூகசேவைகள் மன்றத்தின் பொருளாளர், வீரமுனை மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின்  செயலாளர், இலங்கை குடும்ப திட்டமிடல் மன்றத்தின் உளவளத்துனை ஆலோசகர் ஆகிய பதவிகளிலும் சேவையாற்றியுள்ளார். இவர் அம்பாரை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் அங்கத்து அமைப்பின் பிரதிநிதியாகவும் கடமையாற்றியுள்ளார். மாணவர் கல்வி அபிவிருத்திச் சபையின் ஸ்தபகராகவும்,  சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் நம்பிக்கையாளர் சபையின் உறுப்பினராகவும் இருந்து வருகின்றார். திரு. சுதேந்திரன் அவர்கள் மாணவர் சமூகத்திற்கு கற்பித்தல் திறன்மிக்க ஆங்கில ஆசியராகவும் கடமையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இவரது சமூக, கல்விச்சேவையினை கௌரவிக்கும் வகையில் திருமேனி யோகநாயகம் அவர்களின் பரிந்துரையின்பேரில் நீதியமைச்சர் கௌரவ விசயதாச ராசபக்சவினால் அகில இலங்கை சமாதான நீதவான் நியமனம் 2016.11.30 ஆந் திகதியன்று வழங்கப்பட்டமை 2017.01.27 ஆந் தேதிய வர்த்தமானியில் 464 வது நியமனத்தில் குறிப்பிடப்பட்டுள்து.

அதிகம் வாசித்தவை