வீரமுனை படுகொலையின் 26 ஆவது ஆண்டு நினைவு தினம்

அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் மக்கள் 155 பேர் படுகொலை செய்யப்பட்ட கொடூரத்தின் 26 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று (12/08/2016) வெள்ளிக்கிழமை அனுட்டிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு இன்று 12. 00 மணியளவில் வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை நிகழ்வுகள் நடைபெறவுள்ளதுடன், ஆலயத்திற்கு அருகிலுள்ள நினைவுத் தூபிக்கு இன்று காலை சென்ற மக்கள், உயிரிழந்த தமது உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டி சுடர் ஏற்றி பிராத்தித்தனர்.

இந்நினைவு நிகழ்வில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. கோடீஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

1990ஆண்டு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையின்போது வீரமுனை கிராமத்தினை சூழவுள்ள வளத்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைதீவு, வீரச்சோலை, அம்பாறை ஆகிய பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் வீரமுனை இராம கிருஸ்ண மிசன் வித்தியாலயம், வீரமுனை சிந்தாயாத்திரைபிள்ளையார் ஆலயம் மற்றும் கண்ணகியம்மன் ஆலயம் என்பனவற்றில் தஞ்சமடைந்திருந்தோர் மீது நடாத்திய தாக்குதல்கள் காரணமாக 95க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 20க்கும் மேற்பட்டோர் காணாமல்போயினர்.

vee 1

vee 1

vee 1

vee 1

vee 1

vee 1

vee 1

vee 1

vee 1

அதிகம் வாசித்தவை